அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

vinoth
வெள்ளி, 29 நவம்பர் 2024 (10:04 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சாய்ரா பானு திடீரென ஏ ஆர் ரஹ்மானைப் பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரஹ்மானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்மந்தமானப் பல விதமான வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் சாய்ரா பானு “உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவர் ரஹ்மான். எங்கள் விவாகரத்து சம்மந்தமாக அவர் மீது அவதூறு பரப்புவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ள ரஹ்மான் “நம் அனைவருக்கும் சில மன நலப் பிரச்சனைகள் உள்ளன. எல்லோருக்குள்ளும் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பதான் நாம் கதைகளைக் கேட்கிறோம். தத்துவங்களைப் படிக்கிறோம். பொழுதுபோக்குகளை மேற்கொள்கிறோம். அவை நம் பிரச்சனைகளை ஆற்றுகின்றன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்