மூன்று கொலைகளை சொல்லும் 54321

சனி, 23 மே 2015 (15:38 IST)
5 கதாபாத்திரங்கள்/ 4 லைஃப் ஸ்டைலான விதத்தில், 3 கொலைகளை, 2 மணி நேரத்தில் செய்து பழிதீர்த்தல் என்கின்ற 1 ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே ராகவேந்திர பிரசாத் என்பவர் இயக்கும் படத்தின் கதை. அதற்கு பொருத்தமாக 54321 என்று பெயர் வைத்துள்ளனர்.
ராகவேந்திர பிரசாத் பீட்சா, ஜிகிர்தண்டா படங்களில் கார்த்திக் சுப்பாராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ரம்மி உள்பட சில படங்களில் நடித்த ஜி.ஆர்.அர்வின் இதில் ஹீரோ. நெருங்கி வா முத்தமிடாதேயில் ஹீரோவாக நடித்த சபீர் வில்லன். கன்னட நடிகை பவித்ரா நாயகி.
 
இந்த வித்தியாசமான காம்பினேஷனுடன் ரோகிணி, ரவி ராகவேந்தர் உள்பட சிலரும் நடிக்கின்றனர்.
 
படத்தின் குறிப்பிடத்தகுந்த மற்றெhரு விஷயம், காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 
 
அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்