வேல்முருகன் போர்வெல்ஸ் பாடல்கள் வெளியீட்டு விழா படங்கள்
புதன், 4 டிசம்பர் 2013 (19:53 IST)
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தயாரிப்பாளராகியிருக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. கஞ்சா கருப்பின் நலம் விரும்பும் விஐபி களால் அரங்கு நிரம்பி வழிந்தது.
FILE
அமீர், சமுத்திரக்கனி, ஏ.ஆர்.முருகதாஸ், கரு.பழனியப்பன் கூட்டாக பாடல்களை வெளியிட்டனர். கஞ்சா கருப்புக்கு இணையாக பாராட்டு மழை இயக்குனர் கோபிக்கும் பொழிந்தது. சமுத்திரக்கனி அன்னமிட்ட கை என்று கோபியை பற்றி சொன்னதும், முருகதாஸ், இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவியவர் என்று கோபியை குறிப்பிட்டதும், கோபி விரைவில் இந்த இயக்குனர்களின் வரிசையில் அமர்வார் என்று எண்ண வைத்தது.
FILE
வேல்முருகன் போர்வெல்ஸில் மகேஷ், ஆருஷி நடித்துள்ளனர். போர்வெல்ஸின் ஓனராக கஞ்சா கருப்பு. ஆளுயர மாலையும் மலர் கிரிடமும் சூட்டி கஞ்சா கருப்பையே சென்டிமெண்டில் உருக்கிவிட்டனர். எளிய குடும்பத்தில் பிறந்த கஞ்சா கருப்பு படம் தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை, படம் தயாரித்த பிறகும் எளிமையாக இருப்பதுதான் பெரிய விஷயம் என்றார் கரு.பழனியப்பன்.
FILE
இந்த பாராட்டை கஞ்சா கருப்பு அடுத்தடுத்த தயாரிப்புகளிலும் வாங்க வேண்டும்.