கர்லிங் ஹேர் வேண்டுமா? அப்போ கோக் பயன்படுத்துங்க!!

செவ்வாய், 23 மே 2017 (16:36 IST)
உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.


 
 
தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
 
கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவுவதால் மேல்புறத் தோல் வலுவடைகிறது.
 
தலை முடியில் கோக்கை ஊற்றி 5 முதல் 10 பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து அதற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு தலை முடியை கழுவினால் தலைமுடி மிருதுவாகவும், கர்லிங்காகவும் மாறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்