தெகிடிங்கிறது சூது சார்ந்த விளையாட்டு - இயக்குனர் பி.ரமேஷ்
சனி, 8 பிப்ரவரி 2014 (12:44 IST)
சி.வி.குமாரின் தயாரிப்பு என்றால் தைரியமாக பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அவரின் கடந்தப் படங்கள் உருவாக்கியிருக்கின்றன. அந்த நம்பிக்கையை அதிகரிப்பதற்கான எல்லா தடயங்களும் தெகிடியில் உள்ளது. முந்தைய சில படங்களைப் போலவே குறும்படத்திலிருந்தே இப்படத்தின் இயக்குனர் ரமேஷை கண்டெடுத்திருக்கிறார் சி.வி.குமார். சினிமாக்காரர்களுக்குரிய உயர்வுநவிர்ச்சி இல்லாத ரமேஷின் பேச்சு படம் மீதான நம்பிக்கையை வலுவூட்டுகிறது.
FILE
தெகிடி அப்படீன்னா...?
தெகிடி அப்படிங்கிறது தமிழ்ப் பெயர், தமிழ் வார்த்தை. தமிழ் அகராதியில் பார்த்தோம்னா தெரியும். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு டைட்டில் தேடும்போது பகடை உள்பட பல பெயர்களை பரிசீலத்தோம். ஆனா இது விளையாட்டு சார்ந்த படம் கிடையாது. இந்தப் படத்தின் லீட் கேரக்டர் வெற்றியை சுற்றி நடக்கிற விஷயங்கள், அதை அவர் எப்படி ஹேண்டில் பண்றாரு அப்படிங்கிறதால தெகிடிங்கிற பெயரை தேர்வு செய்தோம். தெகிடிங்கிறது சூது சார்ந்த விளையாட்டை குறிக்கிற சொல். பகடை, தாயம் அதுமாதிரி.
தெகிடிக்கு புரட்டு என்றும் அர்த்தம் இருக்கே...?
ஆமா, அதுமாதிரி நிறைய அர்த்தம் இருக்கு. புரட்டு, ஃப்ராட் அப்படி நிறைய அர்த்தம் இருக்கு. ஸோ இந்தப் படத்துல நீங்க தெகிடி யார் அப்படிங்கிறதையும் பார்க்கலாம். இந்த டைட்டில் படத்துக்கு எவ்வளவு ஆப்டானதுங்கிறதை நீங்க படம் பார்க்கும் போது தெரிஞ்சிடும்.
FILE
நீங்க விளையாட்டுங்கிற அர்த்தத்தில் வைத்தீர்களா இல்லை புரட்டுங்கிற அர்த்தத்தில் வைத்தீர்களா?
அப்படீன்னு சொல்ல முடியாது. அவருக்குத் தெரியாம பல விஷயங்கள் நடக்குது. ப்ளே பண்ற எல்லா கதாபாத்திரங்களுக்குமே அவங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி சூழ்நிலையில இந்த கதை நடக்கிறதா எடுத்திருக்கோம்.
FILE
ஜனனி அய்யருக்கு எந்த மாதிரி வேடம்?
ஜனனி மதுங்கிற ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற கேரக்டரை பண்ணியிருக்காங்க. அவங்க பெங்களூருவில் இருந்து இங்க வர்ற மாதிரி. இங்க அவங்களை சார்ந்த விஷயங்கள், அவங்க மெயின் கேரக்டர் வெற்றியுடன் பழகும் போது அது எதை நோக்கிப் போகுது அப்படிங்கிறதுதான் கதை.
ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி எப்படி...?
படத்துல அவங்க கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட்டாகியிருக்கு. பாடல்களை பார்த்தப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
இது எந்த மாதிரி ஜானர்...?
இதை ஒரு க்ரைம் ட்ராமான்னு சொல்லலாம். ஒரு கமர்ஷியல் ஃபார்மெட்லதான் இந்தப் படம் இருக்கு. அதுனால எக்ஸ்ட்ராடினரியா திங்க் பண்ணி எடுத்திருக்கோம்னு எல்லாம் கிடையாது.
FILE
ஹீரோவும் ஐடி எம்ப்ளாயியா?
ஹீரோ கிரிமினாலஜி படிச்சிட்டு வெளியே வர்ற ஒரு ப்ரெஷ்ஷர்.
இந்த சப்ஜெக்ட்ல பாடல்களுக்கான ஸ்கோப் இருக்காதே?
பாடல்களைப் பொறுத்தவரை மாண்டேஜாதான் பண்ணியிருக்கோம். அதாவது படத்துல அஞ்சு பாடல்கள் இருக்கு. அஞ்சுலேயும் கதையை சொல்ற மாதிரிதான் எடுத்திருக்கோம். ஸோ, டைட்டில் சாங்கை தவிர எல்லாவற்றிலும் கதை இருக்கும். டைட்டில் சாங் - மூட் செட்டிங்னு சொல்வோம் இல்லையா. இது இந்த மாதிரி படம், இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வரும்னு சொல்லக் கூடியதா டைட்டில் சாங் இருக்கும்.
இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?
நான் நாளைய இயக்குனர் சீஸன் டூ வின்னர். அது 2011 ல் நடந்திச்சி. அதுக்கப்புறம் இந்த ஸ்கிரிப்டை முடிச்சிட்டு சி.வி.குமாரை சந்திச்சி கொடுத்தேன். அப்படிதான் இந்த வாய்ப்பு கிடைச்சது.
FILE
சி.வி.குமாரைப் பற்றி...?
சி.வி.குமார் சார் இந்த சப்ஜெக்டை எடுக்கலைன்னா இந்தப் படம் வந்திருக்காது. என்னை மாதிரி அறிமுக இயக்குனர்களுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்திட்டு வர்றார். நல்லா கைட் பண்றார். க்ரியேடிவ்வா நிறைய இன்புட்ஸ் இந்தப் படத்துக்கு தந்திருக்கார்.
இது உங்க பர்சனல் லைஃபுடன்
இந்தப் படத்துக்கும் என்னுடைய பர்சனல் லைஃபுக்கும் சம்மந்தம் கிடையாது. இது முழுக்க முழுக்க ஃபிக்ஷன்.