பள்ளி மாணவியை கற்பழித்துக் கொலை செய்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்கு

செவ்வாய், 19 மே 2015 (14:58 IST)
இலங்கையில் பள்ளி மாணவியை கற்பழித்துக் கொலை செய்தவர்களை பொதுமக்கள் சராமாரியாக தாக்கியுள்ளனர்.
 
இலங்கையை அடுத்த புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவி சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
 

 
இந்த சமயத்தில், அவர்களது வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடையிலான காட்டுபகுதியில் மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர். விஷயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மரத்தில் மாணவியின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
 
அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன. இதன் மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைதான அவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது மருத்துவமனை அருகில் கூடிய பொதுமக்கள் அந்த நபர்களை தாக்கியுள்ளனர். மேலும், சந்தேக நபரின் அண்ணன் வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்த வேளை அவர் பொதுமக்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்