சீனாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டானன் என்பவரிடம் தோல்வி தழுவினார்.
21- 16, 21- 13 என்ற நேர் செட்களில் அவர் தோல்வி தழுவினார். 34 நிமிடங்களில் சாய்னா தோல்வி கண்டார்.
பிரிவு பி-யில் சாய்னாவின் நேரடியான 2வது தோல்வியாகும் இது. 2011ஆம் ஆண்டு இதே தொடரில் இறுதி வரை மூனேறிய சாய்னாவுக்கு இன்னும் ஒரு போட்டியே மீதமிருப்பதால் இந்த முறை அரையிறுதி வாய்ப்பு கனவாக முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.