ராஜஸ்தான், தமிழ் நாடு அணிகளுக்கு இடையே ஜெய்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் அணி இறுதிக்குத் தகுதி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் 552 ரன்களுக்கு 7 விக்கெட் என்று டிக்ளேர் செய்த ராஜஸ்தான் பின்பு தமிழ்நாடு அணியை 385 ரன்களுக்குச் சுருட்டி, ஃபாலோ ஆன் அளித்தது.
தமிழ்நாடு அணியில் பத்ரிநாத் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ராஜஸ்தான் அணியில் விவேக் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 2 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.