இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் ஸ்ரீனிவாசன் அளித்த நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்காக நேரில் வருமாறு முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித்மோடிக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊடக உரிமை மற்றும் இலவச வர்த்தக உரிமை ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ததில் நிதி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு சென்னை காவல்துறையில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீனிவாசன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரில் மோடியுடன் மேலும் 6 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விசாரணைக்காக ஆஜராகும்படி அனைவருக்கும் சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மோடி தற்போது லண்டனில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளை நடத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என அடுக்கடுக்காக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஐ.பி.எல். ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,