செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் சாம்பியன்!

சனி, 3 ஜூலை 2010 (20:33 IST)
அபார சர்வ்களின் மூலமும், வேகமான ஆட்டத் திறனாலும் இரஷ்ய வீராங்கனை வேரா ஜிவோனோரீவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 4வது முறையாக விம்பிள்டன் சாம்பியனாகியுள்ளார் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்.

விம்பிள்டனில் சற்று முன் நடந்த முடிந்த இறுதிப் போட்டியில், முதல் செட்டை 36 நிமிடத்திலும், இரண்டாவது செட்டை 31 நிமிடத்திலும் முடித்து தனது ஆட்டத் திறனை சிறப்பாக நிரூபித்தார் செரினா.

9 ஏஸ்களை இறக்கிய செரினா, தனது முதல் சர்வ்களில் 94 விழுக்காடு புள்ளிகளை வென்றார். 29 வின்னர்களை அடித்தார். கிடைத்த 7 பிரேக் பாயிண்ட் வாய்ப்புக்களில் 3இல் வென்றார். இப்படி எல்லா விதத்திலும் வேரா ஜிவோனாரேவாவை திணறடித்து, புல் தரைக் களங்களில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து சாம்பியன் ஆகியுள்ளார் செரினா.

வெப்துனியாவைப் படிக்கவும்