இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் அறிவித்துள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடிய போது ரோடிக் இடுப்பில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் டேவிஸ் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியில் இடம்பெற மாட்டார் என்றும் அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விம்பிள்டன் இறுதிப்போட்டியின் 5வது செட் ஆட்டத்தில் 16-14 என்ற புள்ளிக்கணக்கில் பெடரர் வென்றார். விம்பிள்டன் தொடரில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற செட் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.