மான்ட்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் சக வீரர் ஸ்டனிஸ்லாஸ் வார்வின்காவிடம் சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரர் 4- 6, 5- 7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி தழுவி வெளியேறினார். இதனால் வார்வின்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
இவர்கள் இருவரும் சுவிட்சர்லாந்து அணிக்காக பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இரட்டைய்ர் பிரிவில் ஜோடி சேர்ந்து தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டீனா வீரர் யுவான் மொனாகோவை ஜெர்மனி வீரர் ஆண்ட்ரியாஸ் பெக் 3- 6, 6- 2, 7- 5 என்ற செட்களில் போராடி வீழ்த்தி காலிறுதிச் சுற்றில் வார்வின்காவை சந்திக்கிறார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டட்தில் ஸ்பெயினின் சிறந்த வீரரான ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ சக வீரர் டேவிட் ஃபெரரை 6- 2, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் மோன்டேன்ஸிற்கும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிற்கும் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெறும் வீரரை வெர்டாஸ்கோ காலிறுதியில் சந்திப்பார்.