விளம்பரதாரர்கள் இல்லாததால் சட்டைகளை விற்று நிதி திரட்டல்!

புதன், 28 மே 2008 (09:56 IST)
தரம்சிங் நினைவு ஹாக்கி போட்டிகள் வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சண்டிகரில் நடைபெறுகிறது. இந்த ஹாக்கி தொடரை ஏற்று நடத்த விளம்பரதாரர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் வீரர்கள் சிலர் சட்டைகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

இதனால் இந்த போட்டியை அந்த ஹாக்கி அமைப்பே நடத்துகிறது. இதனால் இத‌ற்கு நிதி திரட்டிக் கொடுக்க சர்வதேச ஹாக்கி வீரர்கள் ராஜ்பால் சிங், பிரப்ஜோத் சிங், தீபக் தாக்கூர் ஆகியோர் முக்கிய சர்வதேச போட்டிகளின் போது அணிந்திருந்த ஆடைகளை ஏலத்தில் விட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

இந்த ஹாக்கி தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்