பிரேசில் கிரிக்கெட் அணிக்கு இந்தியா பயிற்சி!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (13:11 IST)
பிரேசில்: இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 13 நாள் சுற்றுப்பயணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பிரேசில் கிரிக்கெட் அணிக்கு இந்திய பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிதலின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் பயிற்சியாளர் ஒருவரை பிரேசிலுக்கு அனுப்பவுள்ளது.

இதேபோல் இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க பிரேசில் பயிற்சியாளர் ஒருவரை வரவழைக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டம் அங்கு அதிகபட்ச தரத்துடன் ஆடப்படுவதால் பயிற்சியாளர்கள் நிறைய பணம் எதிர்பார்ப்பார்கள். ஆனாலும் விரைவில் இது குறித்தும் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று பிரேசிலில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்