சின்க்ரனைஸ்ட் 3மீ. டைவிங்: சீன வீராங்கனைகள் தங்கம்!

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (13:07 IST)
பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான சின்க்ரனைஸ்ட் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்ட் டைவிங் (Synchronized Women's 3m Springboard) போட்டியில், சீனாவின் “தங்க ஜோடி” என வர்ணிக்கப்படும் குவோ ஜிங்ஜிங்- வுமின்ஷியா இணை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பீஜிங் தேசிய நீச்சல் மையத்தில் இன்று நடந்த இப்போட்டியில் சீன இணை 343.50 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. ஏதென்ஸி கடந்த 2004இல் நடந்த ஒலிம்பிக்கிலும் இந்த இணை தங்கம் வென்றது நினைவில் கொள்ளத்தக்கது.

ரஷ்யாவின் ஜுலியா பகாலினா- அனஸ்டாஸியா இணை வெள்ளிப் பதக்கத்தையும், ஜெர்மனியின் பிஃஷர்- டிட்டி கோட்ஸியன் இணை வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்