பால் காலிங்வுட் ஓய்வு பெற்றார்

வியாழன், 6 ஜனவரி 2011 (14:28 IST)
நடப்பு ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட்டைத் துவங்கிய பால் காலிங்வுட் 68 டெஸ்ட் போட்டிகளில் 4,259 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 40 ரன்கள்.

ஆனால் தற்போதைய ஆஷஸ் தொடரில் இவர் 83 ரன்களையே எடுக்க முடிந்தது. இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான காலிஙுவுட் தொடர்ந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்களையும் 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் காலிங்வுட்.

வெப்துனியாவைப் படிக்கவும்