பாகிஸ்தானுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை ஹேமில்டனில் துவங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான நியூஸீலாந்து அணியில் கிளின்ட் மெக்காய் காயமடைந்தாதால் அவருக்குப் பதிலாக டேரல் டஃபியை அணியில் சேர்த்துள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீசாளரான கிளிண்ட் மெக்காய் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவுக்குச் சிறப்பாக வீசினார்.
ஆனால் அவர் திடீரென காயமடைந்துள்ளதால் அவரால் முதல் டெஸ்ட் போட்டிக்குள் குணமடைய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நியூஸீலாந்து அணி: ப்ரென்ட் ஆர்னெல், ஜேம்ஸ் பிராங்கிளின், மார்டின் கப்தில், கிறிஸ் மார்டின், பிரெண்டன் மெக்கல்லம், டிம் மேகின்டோஷ், ஜெச்சி ரைடர், டிம் சவுதீ, ராஸ் டெய்லர், டேரல் டஃபி, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்ஸன்.