முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 362 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காலிஸ் அபாரமாக ஆடி 161 ரன் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்துள்ளது. கம்பீர் 65 ரன்களுடனும், தெண்டுல்கர் 49 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.