டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா மிக முக்கியமான ஜாக் காலிஸின் விக்கெட்டை ச்ரீசாந்தின் ஆக்ரோஷமான பவுன்சருக்கு இழந்தது. தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள்.
டீவிலியர்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆஷ்வெல் பிரின்ஸ் களமிறங்கியுள்ளார்.
இந்தியா இன்று ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்குடன் துவங்கியது. ஸ்ரீசாந்த் நேராக நல்ல அளவில் வீசி கட்டுப்படுத்தினார். திடீரென அவர் வீசிய பவுன்சருக்க்கு நிலைகுலைந்து போனார் காலிஸ்.
பந்து எழும்பியபடியே வந்தது ஜாக் காலிஸ் முகத்தை விலக்கி, இரண்டு கால்களையும் தூக்கி எழும்பினார். ஆனால் பந்து தானகவே காலிஸின் கிளவில் பட்டு கல்லி திசையில் சேவாகிடம் சுலபமான கேட்சாக முடிந்தது. பயங்கரமான பந்தை வீசி ஜாக் காலிஸை வீழ்த்திய ஸ்ரீசாந் தன் 3-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா 178 ரன்கள் பின் தங்கியுள்ளது. 6 விக்கெட்டுகள் உள்ளது.