டர்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சற்று முன் தன் இரண்டாவது இன்னிங்சில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லஷ்மண் 96 ரன்கள் எடுத்து கடைசியாக டேல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக உணவு இடைவேளை முடிந்த பிறகு பால் ஹேரிஸ் ஜாகீர் கான் விக்கெட்டை வீழ்த்தினார்.
இஷாந்தும் அதிக நேரம் நீடிக்கவில்லை, அவரை ஜாக் காலிஸ் வீழ்த்தினார்.
லஷ்மண் பால் ஹேரிஸ் பந்தை பெடல் ஸ்வீப் செய்து பிறகு மேலேறி வந்து ஒரு ஷாட்டை அடித்து 96 ரன்கள் எடுத்திருந்தபோது டேல் ஸ்டெய்ன் பந்தை பவுண்டரி அடிக்க முயன்று மார்க் பௌச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் மோர்கெல், சொட்சொபி தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளையும் ஹேரிஸ், காலிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்று இன்னும் 56 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் கிரேம் ஸ்மித்தும், அல்விரோ பீட்டர்சனும் களமிறங்கியுள்ளனர்.