லஷ்மண், ஜாகீர் அபாரம்; இந்தியா 218/7

செவ்வாய், 28 டிசம்பர் 2010 (15:46 IST)
டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் இருதரப்பினருக்கும் சாதகமாக மாறி மாறி இருந்து வரும் சூழ்நிலையில் 3ஆம் நாளான இன்று லஷ்மண் தனது இரண்டாவது இன்னிங்ஸ் திறமையை வெளிப்படுத்தி 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்தியா உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.

ஜாகீர் கானும், லஷ்மணும் இணைந்து 17 ஓவர்களில் 70 ரன்களை இதுவரைச் சேர்த்துள்ளனர். கான் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

புஜாரா உடனடியாக அவுட்டாக ஹர்பஜன் சிங் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதன் பிறகு தோனி லஷ்மணுடன் இணைந்து 10 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தனர் தோனி 21 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் சொட்சொபி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்தபடியாக ஹர்பஜனுக்கு கடினமான பந்து விழுந்தது. 148/7 என்று மொட்ட ரன் எண்ணிக்கை 222 ரன்கள்தான் இருந்தது.

இந்த நிலையில் வி.வி.எஸ். லஷ்மண் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஃபார்மை தொடர்ந்தார். அவர் 140 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஜாகீர் கான் இருமுறை எல்.பி.டபிள்யூ. முறையீடிலிருந்து நடுவரின் தப்பான கணிப்பால் பிழைத்தார். அதிலும் டேல் ஸ்டெய்னின் பந்து அவரது பின்னங்காலைத் தாக்க கிரீஸிற்குள் ஸ்டம்பிற்கு அருகில் இருந்தார் ஜாகீர் தென் ஆப்பிரிக்கா இதனை அவுட் கொடுக்காதது கண்டு ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஏமாற்றம் அடைவதிலும் நியாயம் உள்ளது.

நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்மித் தோற்றால் 3-வது நடுவர் முறையீடு இல்லாததைச் சுட்டிக்காட்டுவார்.

இந்தியா இரண்டரை மணி நேர ஆட்டத்தில் 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

ஒட்டு மொத்தமாக இந்தியா 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்