74 பந்துகளில் டீவிலியர்ஸ் சதம்; தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு
சனி, 18 டிசம்பர் 2010 (15:58 IST)
செஞ்சூரியன் மைதானத்தில் ரன் மழை தொடர்கிறது. டீவிலியர்ஸ் சற்று முன் 74 பந்துகளில் சதம் அடித்து குறைந்த பந்துகளில் சதம் எட்டிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். காலிஸ் 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
93 ரன்களில் இருந்த டீவிலியர்ஸ் ரெய்னாவின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்து சதம் எடுத்தார்.
இந்த அமர்வில் 31 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களை விளாசியுள்ளது. டீவிலியர்ஸ் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் சகிதம் 85 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
ஜாக் காலிஸ் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் சகிதம் 167 ரன்கள் எடுத்து தன் முதல் டெஸ்ட் இரட்டை சதம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
போகிற போக்கில் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் தன் முதல் இரட்டைச் சதம் எடுத்து விடுவார் என்று தோன்றுகிறது. அவர் இதுவரை 25 ஓவர்களில் 163 ரன்களை மட்டுஏ விட்டுக் கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்துள்ளது.