செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணியின் துயரம் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி இன்று சற்று முன் வரை 3 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது.
ஜாக் காலீஸ் மேலும் பலமடைந்து கொண்டே செல்கிறார். அவர் 123 ரன்களுடனும் டீவிலியர்ஸ் 31 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக 116 ரன்களுடன் துவங்கிய ஹஷிம் அம்லா, இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந் பந்துகளை மைதானம் முழுதும் விரட்டி தொடர் பவுண்டரிகளாக விளாசினார். கடைசியில் 140 ரன்கள் இருந்தபோது பெரிய பந்து ஒன்றுமில்லை, லெக் திசையில் வீசப்பட்ட மோசமான பந்தை பிளிக் செய்ய முயன்று எட்ஜ் செய்தார். தோனி கேட்ச் பிடித்தார். இஷாந்திற்கு ஓசி விக்கெட்.
இஷாந்த், ஸ்ரீசாந்த், உனட்கட், ஹர்பஜன் ஆகிய பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கும் மேல் கொடுத்து வருகின்றனர்.
இன்று முழுதும் இந்தியாவை வெயிலில் வாட்டி எடுக்கவுள்ளனர் தென் ஆப்பிரிக்க அணியினர்.