நியூஸிலாந்து 350 ரன்னுக்கு அவுட்
சனி, 13 நவம்பர் 2010 (12:35 IST)
ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
2வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரத் ஹாப்கின்ஸ் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து வில்லியம்சன் 4 ரன்னில் வீழ்ந்தார். இந்த இரு விக்கெட்டுகளையும் ஜாகீர்கான் கைப்பற்றினார்.
பின்னர் வந்த அணித் தலைவர் வெட்டோரி 11 ரன்னிலும், ரைடர் 70 ரன்னிலும், செளத்தி 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார்.
தற்போது உணவு இடைவேளை முடிவில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி கூடுதலாக 9 ரன் சேர்ப்பதற்குள் கடைசி விக்கெட்டையும் இழந்தது.
இதனால் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஓஜா, ஸ்ரீசாந்த் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.