பிரட் லீ சம்பளம் குறைக்கப்படலாம்; ஜான்சனுக்கு உயர்ந்த இடம்
செவ்வாய், 31 மார்ச் 2009 (15:59 IST)
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அறிவிக்கவுள்ள புதிய வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் பிரட் லீ, மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோருக்கு சம்பளம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனின் சம்பளம் அதிகபட்சமாக உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வீரரக்ள் ஒப்பந்தத்திற்கான அடிப்படை தரவரிசையில் மிட்செல் ஜான்சன் முதலிடம் வகிப்பார் என்றும் இதனால் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரரகளில் அதிக சம்பளம் பெறு வீரராக அவர் உஅர்வார் என்றும் ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ஒப்பந்தப் பட்டியலில் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது முதலாம் இடத்தை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் ஜான்சன் இந்த கோடை கால கிரிக்கெட் தொடர்களில் நியூஸீலாந்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் 17 விக்கெட்டுகளியும் தென் ஆப்பிரிக்காவில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
மேலும் தன்னை ஆஸ்ட்ரேலியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 96 ரன்களையும் கடைசியில் ஒரு சதத்தையும் எடுத்து முடித்துள்ளார்.
இதுவே ஜான்சனின் இட உயர்விற்கு காரணம் என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது.