சச்சின் அரைசதம் இந்தியா 261/4

திங்கள், 15 டிசம்பர் 2008 (13:15 IST)
சென்னை டெஸ்ட் பரபரப்பான நிலையில் உள்ளது. வெற்றி பெற இன்னமும் 126 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆடி வரும் இந்தியா தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் அபாரமான முறையில் விளையாடி 50 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

யுவ்ராஜ் சிங் 3 பவுண்டரிகளுடன் மறு முனையில் 19 ரன்களுடன் விளையாடி வருகிறார். உணவு இடைவேளையின் போது 213/3 என்று இருந்த இந்தியா உணவு இடைவேளை முடிந்த பிறகு லக்ஷ்மண் ஆஃப் ஸ்பின்னர் கிரேம் ஸ்வானிடம் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சச்சின் டெண்டுல்கர் தனது முழு அனுபவத்தையும் திறனையும் பயன்படுத்தி ஆடி வருகிறார். மறு முனையில் யுவ்ராஜ் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை கடைபிடித்து வருகிறார்.

ஆட்டக் களம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சில லெந்களில் பேட்ஸ்மென்களுக்கு அதிக சிரமம் கொடுப்பதாய் உள்ளது. இந்தியாவிற்கு தேவை 126 ரன்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்