இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது

திங்கள், 1 டிசம்பர் 2008 (13:16 IST)
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என்று கூறியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வருகை தருகிறது என்று உறுதியாக அறிவித்துள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நாடு திரும்பிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளுக்காக டிசம்பர் 3ஆம் தேதி இந்தியாவிற்கு மீண்டும் வருகிறது.

பாதுகாப்பு காரணம் காரணம் கருதி முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதிலிருந்து மொஹாலிக்கு மாற்றப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஏற்கனவே சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் டிசம்பர் 11 ஆம் தேதி துவங்குகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆட்டமும் மொஹாலியில் டிசம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்