சேவாக் சச்சின் அபாரத் துவக்கம்!

புதன், 26 நவம்பர் 2008 (19:59 IST)
கட்டாக்கில் நடைபெறும் 5-வது ஒரு நாள் போட்டியில் 271 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எடுத்துள்ளது. சேவாக் 45 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 55 ரன்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 39 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

சேவாகும், சச்சினும் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். ஆனால் புதிதாக களமிறங்கும் வீரர்கள் ஆட்டக்களத்தில் பந்துகள் சற்றே தாழ்வாக வருவதை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என்று தெரிகிறது.

சேவாக் 55 ரன்களில் 46 ரன்களை ஓடாமலே பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர்களில் ஸ்டூவர்ட் பிராட் இரண்டு முறை சச்சினை வீழ்த்துவதற்கு அருகில் வந்தார், ஆனால் இருமுறையும் பந்து சச்சின் மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்டம்புகளுக்கு மிக அருகில் சென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்