கொழும்பில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 396 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியாவை விட இலங்கை 147 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 134வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ரன் எடுத்தது. சங்கக்காரா அதிகபட்சமாக 144 ரன், பிரசன்ன ஜெயவர்த்தனே 49 ரன் எடுத்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கான், ஹர்பஜன், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 3வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்துள்ளது. துவக்க வீரர்கள் சேவாக் 10 ரன், கம்பீர் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.