வங்கதேசத் தொடரில் சச்சின் இல்லை!

வெள்ளி, 30 மே 2008 (10:05 IST)
மும்பை: வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் காயம் காரணமாக சச்சின் பங்கேற்க மாட்டார்

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து சச்சின் இன்னமும் முழுமையாக குணமடையாததால் இந்த தொடர்களில் அவர் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.

முத்தரப்பு ஒரு நாள் போட்டி ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 24ம் தேதி பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்