கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (19:07 IST)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே
 
ஒலிம்பிக் உள்பட ஒரு சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலும் ஐபிஎல் உள்பட ஒரு சில போட்டிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
இந்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நியூசிலாந்தில் தற்போது கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் போட்டியை நடத்துவதற்கு சாத்தியமில்லை என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது
 
அடுத்த ஆண்டுக்கான பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெறும் என்றும் போட்டி நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்