கோலியின் 140 எழுத்துகளுக்கு 2.5 கோடி – டிவிட்டரில் கல்லா கட்டும் ரன் மெஷின் !

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (09:30 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிவிட்டரில் ஒவ்வொரு டிவிட்டுக்கும் 2.5 கோடி ரூபாய் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் ரன்மெஷினாக ரன்களைக் குவித்து வரும் சாதனை மன்னன் கோலி, டிவிட்டரில் பல கோடி ரூபாயை வருவாயாக குவித்து வருகிறார். அவர் எழுதும் ஒவ்வொரு 140 எழுத்துகளுக்கும் (டிவிட்டரில் அதிகபட்சம் 140 எழுத்துகள் மட்டுமே எழுதமுடியும்) மற்றும் புகைப்படங்களுக்கும் அவர் 2.5 கோடி ரூபாய் வருவாயாக பெற்று வருகிறார்.

இதன் மூலம் அதிகமாக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் அவர் 5 ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீர்ர ரொனால்டோ (6.2 கோடி). ஜெர்மனியின் இனியஸ்டா(4.2 கோடி), அர்ஜெண்டினாவின் நெய்மார்(3.4 கோடி) மற்றும் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ்(3.3 கோடி) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்