பாலியல் குற்றவாளிக்கும், விராட் கோலிக்கும் என்ன சம்மந்தம்?? தூசி தட்டப்படும் வீடியோகள்!!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (21:10 IST)
பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம், இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
பாலியன் பலாத்கார வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுளார் குர்மீத் ராம் ரஹீம். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இது ஒருபுறம் இருக்க, தற்போது சமுக வலைதளங்களில் ராம் ரஹீம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிக்கர் தவான், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா ஆகியொருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
இதே போன்று மற்றொரு வீடியோவிலும் ராம் ரஹீம் தவான், கோலி, மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் ஆகியோர் தன்னுடைய பக்தர்கள் என்று கூறுகிறார்.
 
இவை இரண்டும் பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போதி இது தூசி தட்டபட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்