நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டுபிளசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகிய ஐந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன.
இதில் சுரேஷ் ரெய்னா மிக மோசமாக விளையாடி அவுட்டானர். அப்போது வர்ணனையில் இருந்த பீட்டர்சன் ஸ்டெயினை நோக்கி இவரை விட நீங்கள் நன்றாக விளையீடுவீர்கள் எனக் கேலியாக சொல்ல அதற்கு பதிலளித்த ஸ்டெயின் இந்த நேரத்தில் ரெய்னா என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. அவர் கண்டிப்பாக ஒரு ஸ்கூல் பையன் போலவே விளையாடினார். அவர் விளையாடியதைப் பார்த்து யாரும் சர்வதேசக் கிரிக்கெட்டர் என்று நம்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.