இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாமல் வென்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த தோல்வி குறித்து இப்போது பேசியுள்ள ஆஸி கேப்டன் டிம் பெய்ன் களத்துக்கு வெளியே கவனச்சிதறல்களை உருவாக்கி இந்தியா வென்றது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர்களிடம் விளையாடும்போது ஒன்றுமேயில்லாத விஷயத்தை பெரிது படுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லைகளைக் கொடுப்பார்கள். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு நாங்கள் தோற்றுவிட்டோம். பிரிஸ்பேனில் விளையாட மாட்டோம் என சொன்னார்கள். இதனால் அடுத்த போட்டி எங்கு நடக்க போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. இது போன்ற சீன்களை உருவாக்குவதில் அவர்கள் பெயர் பெற்றவர்கள். என புதிது புதிதாக எதையெதையோ கூறியுள்ளார்.
டிம் பெய்னின் இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் டிம் பெய்ன் கருத்து சிறுபிள்ளத்தனமானது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியில் பேசுகிறார், அவர் கூறும் குற்றச்சாட்டுகளை எப்போதும் உள்ளூர் அணிகள் தான் செய்யும். அந்த அணியின் பயிற்சியாளர் லாங்கர் இந்திய அணி சிறப்பாக விளையாடியது எனக் கூறியிருக்கிறார். டிம் பெய்ன் இப்படி பேசினால் அவரின் கேப்டன்சி நீடிக்காது எனக் கூறியுள்ளார்.