தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம்பெற்றார். ஆனாலும் ஆஸ்திரேலியா செல்லாத அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தனது உடல்தகுதியை நிருபிக்க பயிற்சிகள் மேற்கொண்டார்.