ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு அபராதம்

வெள்ளி, 12 மே 2023 (22:13 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் போட்டியின் நேற்றைய  ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில்,ராய் 10 ரன்னும், குர்பஸ் 18 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னும், ரானா 22 ரன்னும், ரஸல் 10 ரன்னும், ரிங்கு சிங் 1 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான்  ராயல்ஸ் அணிக்கு 10 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து சூப்பர் வெற்றி பெற்றது.

இதில், ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 28ரன்களும்,  எடுத்தனர். இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்(0) ஆனார்.

ரன் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பியபோது அவர் தன் பேட்டால் பவுண்டரி எல்லைக்கோட்டை  தாக்கினார்.

இதனால், ஐபிஎல் போட்டியில்  நடத்தை விதிகளை மீறிதயற்காக ராஜஸ்தான் அணி கேப்டன் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்