இந்திய அணியினர் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர்கள? பாகிஸ்தான் வீரர் காட்டம்

வெள்ளி, 12 மே 2023 (19:17 IST)
உலகில் உள்ள மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடி பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி மட்டும் வர மறுப்பது அவர்கள் என்ன வேற்று கிரகவாசிகலா என்ற கேள்வி எழுகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து ஆகிய நாடுகள் பாகிஸ்தான் வந்து விளையாடியது. அவர்களது பாதுகாப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை 
 
ஆனால் இந்தியா மற்றும் வர மறுப்பது அவர்கள் வேற்று உலகத்தை சேர்ந்தவர்களா என்ற கேள்வி எழுகிறது என்றும் தெரிவித்தார். ஐசிசி இந்த பிரச்சனைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்