அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுக்கள்: இருப்பினும் இந்தியா தோல்வி
திங்கள், 2 மார்ச் 2020 (08:13 IST)
அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுக்கள்: இருப்பினும் இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 36 ஓவரில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனை அடுத்து இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் மட்டுமே 5-0 என்ற கணக்கில் வென்று உள்ளது என்பதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது