இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு 2022-26 ஆண்டுகாலம் வரை கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ப்ரோமோட்டராக உள்ளது, இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று நாசிக்கிலும் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து கோவையில் 3ம் சுற்று ஜூலை 27 மற்றும் ஜூலை 28ல் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் கவுரவ விருந்தினராக எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், போட்டியாளர்கள், ஓட்டுனர்கள், மற்றும் புளூ பேண்ட் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கார் ராலியில் மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த 8 பிரிவுகளில் மொத்தம் 8 சுற்றுக்கள் இதில் இடம் பெறும் எனவும் இதில் மொத்தம் 269.38 கிலோ மீட்டர் தொலைவை வேகமாக கடக்க வேண்டும் எனவும்,