ட்ரிப்யூட் குடுத்தது குத்தமாய்யா? மெஸ்ஸிக்கு அபராதம்! – கடுப்பான ரசிகர்கள்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:22 IST)
ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா போட்டியில் கோல் அடித்த மெஸ்ஸி மறைந்த மரடோனாவுக்கு ட்ரிப்யூட் செய்ததற்கு கால்பந்து பெடரேஷன் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கால்பந்து ரசிகர்களின் ஆதர்சமான கால்பந்து வீரர் டியாகோ மரடோனா சில வாரங்கள் முன்னதாக தனது 60வது வயதில் உடல்நல குறைவால் காலமானார். அவரை ஆதர்சமாக கொண்ட கால்பந்து வீரர்களில் முக்கியமானவர் தற்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள லியோனல் மெஸ்ஸி.

தற்போது நடைபெற்று வரும் ஸ்பானிஷ் லா லிகா போட்டியில் சில நாட்கள் முன்னதாக ஒசாசுனா அணியோடு மோதிய மெஸ்ஸியின் பார்சிலோனா அணி 0-4 என்ற கணக்கில் வெற்றியடைந்தது. இந்த போட்டியில் கடைசி கோலை அடித்த மெஸ்ஸி தனது ஜெர்ஸியை கழற்றி உள்ளே தான் அணிந்திருந்த மரடோனாவின் பழைய ஜெர்சியை காட்டி வானத்தை நோக்கி முத்தங்களை அனுப்பி ட்ரிப்யூட் செய்தார்.

இந்நிலையில் ப்ளே டைம் முடிவதற்குள் மெஸ்ஸி இவ்வாறு செய்ததோடு தனது ஜெர்சியை கழற்றி தரையில் போட்டது பெடரேஷன் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவரது பார்சிலோனா அணிக்கு 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணிக்கு இது பெரிய அபராதம் இல்லை என்றாலும், மரடோனாவுக்கு ட்ரிப்யூட் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது. இதனால் பலர் மெஸ்ஸிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்