இந்நிலையில் இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் இதுதான் தனது கடைசி ஒலிம்பிக் தொடர் என அறிவித்துள்ளார்.தற்போது அவருக்கு 38 வயது ஆகிறது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அதிகபட்ச வயது 40 என்பதால் அடுத்த ஒலிம்பிக்கில் அவரே கலந்துகொள்ள நினைத்தாலும் அனுமதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.