டபுள் செஞ்சுரி அடித்த இஷான் கிஷான்.. இந்தியாவின் ஸ்கோர் 400ஐ தாண்டுமா?

சனி, 10 டிசம்பர் 2022 (14:21 IST)
டபுள் செஞ்சுரி அடித்த இஷான் கிஷான்.. இந்தியாவின் ஸ்கோர் 400ஐ தாண்டுமா?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தொடங்கிய நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 3 ரன்களில் அவுட் ஆகி விட்டாலும் விராத் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.
 
இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அதேபோல் விராட் கோலி 85 ரன்கள் அடித்து உள்ள நிலையில் அதில் 9 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சற்றுமுன் வரை 35 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 305 ரன் எடுத்து உள்ள நிலையில் இன்னும் 15 ஓவர்கள் இருக்கும் நிலையில் 400 ரன்கள் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்