72 பந்தில் 300 ரன்கள் இந்திய வீரரின் அசாத்திய சாதனை!!
புதன், 8 பிப்ரவரி 2017 (11:40 IST)
உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் முச்சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார் டெல்லி பேட்ஸ்மேன் மோகித் அலாவத்.
ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக ஆடும் மோகித் அலாவத், உள்ளூர் டி20 போட்டியொன்றில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியில் மாவி லெவன் அணிக்காக களமிறங்கிய மோகித், பிரண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக விளையாடிய போது, வெறும் 72 பந்துகளில் 14 பவுண்டரிகள், 39 சிக்சர்களுடன் 300 ரன்களை குவித்தார்.
21 வயதேயான மோகித், ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளிலும் சிக்சர் விளாசி இந்த மைல்கல்லை எட்டினார். மொத்தத்தில் அந்த அணி 20 ஓவர்களில் 416 ரன்களை குவித்தது.
டி20 போட்டியில் இதுவரை உலகில் முச்சத சாதனை படைக்கப்படவில்லை. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.