இந்தப் போட்டியில் தோனியின் வித்தியாசமான முடிவுகள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். குறிப்பாக கடைசி ஒவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. நிதானமாக ஆடியிருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் அடித்த ஒரு தவறான ஷாட் கேட்சாகி இந்தியா வென்றது
மிஸ்பா-உல்-ஹக் அவுட் ஆகும் அந்த பந்துக்கு முந்தைய பந்தின்போதுதான் தோனி ஃபீல்டிங்கை மாற்றினார் என்பதும், அதனால்தான் கேட்சாகி அவர் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கேட்ச் இன்றளவும் மறக்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது