இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி கடந்த 21ந் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து முன்னிலை வகித்தது. அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டையில் முடிந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை படைத்தார்.
இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் ஃபுல் ஃபார்மில் இருக்கின்றனர். இருந்தபோதிலும் கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்துவிட்டனர்.