இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாஜக வில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லையாம். இந்நிலையில் இப்போது கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படும் பேபிஃப்ளு எனப்படும் மாத்திரையை 2800க்கும் மேற்பட்ட அட்டைகளை வாங்கி வைத்து விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவரின் ஒரே ஒரு பரிந்துரை சீட்டை வைத்து அவர் எப்படி இவ்வளவு மாத்திரைகளை வாங்கினார் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மேல் விசாரணையை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.