நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரின் முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி, இங்கிலாந்து அணியை தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து நான் யோசித்து வருகிறேன் என்று ஜோஸ் பட்லர் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அதை நாங்கள் கை விட்டுவிட்டோம். ஜோ ரூட் நம்ப முடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை சிறப்பாக சமாளித்தார். அவருக்கு துணையாக, டாப் 6 பேட்டர்களில் ஒருவர் உதவியிருந்தால் கூட , நாங்கள் போட்டியை வென்றிருப்போம்.
இப்போது உணர்ச்சிகரமாக இருப்பதால், மேலும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கேப்டனாக இல்லாத போதிலும், தலைமை பொறுப்பை ரசித்தேன். எனவே, கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் சிந்திப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பேட்டி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.