உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய பயிற்சி போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி கொடுத்த இலக்கை 17.3 ஓவர்களில் அடித்து இங்கிலாந்து அணி அசத்தியுள்ளது
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. சற்றுமுன் முடிவடைந்த ஒரு பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகமது நபி 44 ரன்களும், நூர் அலி ஜாட்ரான் 30 ரன்களும், டாலட் ஜால்ட்ரான் 20 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 161 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 17.3 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேஜே ராய் 46 பந்துகளில் 89 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தர். பெயர்ஸ்டோ 39 ரன்களும், ரூட் 29 ரன்களும் அடித்தனர்.,
இந்த நிலையில் இன்னொரு பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது 240 என்ற இலக்கினை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலியா சற்றுமுன் வரை 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது