100வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சாதனை!
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:05 IST)
தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே கிரிக்கெட் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார் என்பதை பார்த்தோம்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100வது போட்டியில் சதம் எடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அவர் 100வது போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை செய்துள்ளார். மேலும் அவர் 200 அடித்தவுடன் ரிட்டர்யர்டு ஹர்ட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன் எடுத்துள்ளது என்பதும், தென்னாப்பிரிக்க அணியை விட அந்த அணி 177 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.